Posts

Showing posts with the label காற்று வெளியிடை கண்ணம்மா

காற்று வெளியிடை கண்ணம்மா

Image
காற்று வெளியிடை கண்ணம்மா (நேரலையில் ஒரு காதல் கதை….) தொடர் கதை  1. முகிலனைத் தேடும் முகிலினங்கள் வங்கக் கடலோடு இரவெல்லாம் காதலில் திளைத்து மகிழ்ந்திருந்த உற்சாக புன்னகையை காட்டியபடி, கடமையாற்ற கிளம்பியிருந்தான் அருணன் என்னும் பகலவன்.  ‘மெரினாவின் மணல்வெளியை ஓயாது முத்தமிட்டு மகிழ்ந்திருந்தாள் கடல்குமரி. தீராத அலையெனினும் தீரமுடன் போராடி, அந்நியனின் கண்ணிலெல்லாம் மணல்பொடியை தூவிவிட்டு, சமுத்திரத்தின் மச்சங்களை அள்ளிவந்த கட்டுமரங்களின் அணிவகுப்பு, ஆழ்கடலின் ஆபத்துக்களில் எல்லாம் வென்று வரும் வெள்ளித் தேர்களாக காட்சியளித்தது.  தெள்ளு தமிழ் கொஞ்சியாடும் நாவாளர் அண்ணாவின் சதுக்கம் தொட்டு, கலங்கரை விளக்கு வரையான காமராஜர் சாலையெங்கும் நடைப்பயிற்சி செய்ய வந்தவர்கள் தலைகளால் நிறைந்திருந்த அற்புத காலை அது……  பலரின் காதுகளில் மாட்டியிருந்த ஹெட்-போன்களிலும் ஒலித்துக் கொண்டிருந்த வானம்பாடி எப்.எம்-மில் அறிவிப்பாளரின் வசீகர குரல் ரீங்காரமிட்டது!. “காற்றலையில் கதை சொல்ல வரும் உங்கள் வானம்பாடி  எப்.எம்மின் அன்பு அறிவிப்பாளன் நான் மகேஷ். நேரம் சரியாக ஆறு மணி முப்பது நிமிடங்கள். ...