தீ….தீ….தித்திக்கும் தீ….. (கருவறை களவுகள்) அத்தியாயம் - 2
தீ….தீ….தித்திக்கும் தீ….. (கருவறை களவுகள்) அத்தியாயம் - 2 இருளை மெல்ல மெல்ல விரட்டியபடி கதிரவன் கடலுக்குள் இருந்து எழுந்து வரும் இனிய காலை நேரம்….. சென்னையில் பிரீத்தி - குகேஷ் பிறந்து வளர்ந்த பூர்வீக வீட்டில் சுப்ரபாதம் ஒலிக்கத் தொடங்கியது. பூஜை அறையில் விளக்குகளை ஏற்றிவிட்டு, தூபம் காட்டியபடி ஈரத்துவாலையை தலைக்கு கட்டிக் கொண்டு வெளியே வந்தாள். அப்போது தான் உறக்கம் கலைந்து திரும்பிப் படுத்த வினித் முகத்தின் மீது சடாலென்று ஒரு ஜோடிக் கால்கள் வந்து விழுந்தன. “ஆஆஆஆ… அடேய்! ஏண்டா இப்படி படுத்தறே? அங்கிட்டு திரும்பி காலை போடக் கூடாதா? மூக்கே போச்சு” என்றவாறே, முகத்தின் மீது காலை போட்டுக் கொண்டு உறங்கிய தன் மகனை பார்க்கும் மைத்ரேயனை கவனித்தபடியே அறைக்குள் வந்தாள் ரூபா, அவன் நிலை கண்டு ஒரு நமட்டு சிரிப்பை உதிர்த்தவாறே…. “என்ன மைதா டார்லிங்! இன்னும் தூக்கம் கலையலயா? இப்படியே நீ தூங்கிட்டு இருக்கக் கூடாதுன்னு தான் என் பையன் உன்ன எழுப்பி விட்டு இருக்கான். அதுக்கு எதுக்கு பையனை காலையிலேயே திட்டற?” அவளை ‘வெறிக்க ஒரு நொடி பார்த்தவன் பின் இலேசாகி….’ “இப்படி எல்லாம் கா...