ஒரு புத்தகத்தை வெளியிடுவது எப்படி? – முழுமையான வழிகாட்டி

📌 Topic Summary:

இன்றைய நவீன யுகத்தில் புத்தகம் வெளியிடுவது கனவா?

சுய வெளியீடு, பாரம்பரிய வெளியீடு, டிஜிட்டல் வெளியீடு — எது உங்களுக்கு சரி? 

தவறான தேர்வு உங்கள் புத்தகத்தை தோல்விக்கு தள்ளும்.

ISBN முதல் மார்க்கெட்டிங் வரை — ஒரு புத்தகத்தை வெற்றியாக்கும் மறைக்கப்பட்ட உண்மைகளை இந்த கட்டுரை வெளிப்படுத்துகிறது!




ஒரு புத்தகத்தை வெளியிடுவது எப்படி? – முழுமையான வழிகாட்டி

அறிமுகம்

தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளராக தங்களை பதிவு செய்வது என்பது பலரின் கனவாக இருக்கிறது. ஆனால் “ஒரு புத்தகத்தை எப்படி வெளியிடுவது?” என்ற கேள்வி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது என்பதே நடைமுறை எதார்த்தம். இன்றைய டிஜிட்டல் காலத்தில், ஒரு படைப்பை தொழில்ரீதியான புத்தகமாக  வெளியிடுவது என்பது முன்பைவிட எளிதாகவும், பல்வேறு சுதந்திரமான வாய்ப்புகளுடனும் கிடைக்கிறது என்பதை நீங்கள் அறிவது மிகவும் முக்கியம்.

இந்த கட்டுரையில், தமிழில் ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கான முழுமையான, படிப்படையான வழிகாட்டுதல்களை  உங்களுக்கு விளக்க நான் இங்கே கடமைப்பட்டுள்ளேன். இது புதிய எழுத்தாளர்களுக்கும், பதிப்பக துறையில் முன்னேற விரும்புபவர்களுக்கும் மிகவும் உதவும்.

புத்தக பதிப்பில் இருக்கும் முக்கிய வகைகள்

தமிழ்நாட்டில் புத்தக பதிப்பு பொதுவாக மூன்று முக்கிய முறைகளில் நிகழ்கிறது

1. பாரம்பரிய வெளியீடு (Traditional Publishing)

இதில், பதிப்பாளர் (Publisher) உங்கள் புத்தகத்தை வெளியிடும் பொறுப்பை ஏற்கிறார்.

நன்மைகள்:

  • செலவு குறைவு (அல்லது இல்லாமலும் இருக்கலாம்)

  • விநியோகம் (Distribution) எளிதாக நிகழும்

  • பிராண்டு மதிப்பு

குறைபாடுகள்:

  • தகுதியான படைப்புக்களை தேர்வு செய்வதில் நிகழும் கால அளவு அதிகம்.

  • எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்.

2. சுய வெளியீடு (Self Publishing)

எழுத்தாளர் தன்னுடைய படைப்பை தானே பதிப்பித்து புத்தகமாக வெளியிடும் முறை. 

நன்மைகள்:

  • எழுத்தாளருக்கு தன் படைப்பை அப்படியே வெளியிட முழு சுதந்திரம் கிடைக்கிறது.

  • அதிக வருமான வாய்ப்பு

  • விரைவாக அவரே பதிப்பித்து வெளியிட சாத்தியங்கள் அதிகம்.

குறைபாடுகள்:

  • அதிக முதலீடு இதற்காக எழுத்தாளருக்குத் தேவைப்படுகிறது.

  • பதிப்பித்த புத்தகத்தை வெளியிட்டு சந்தைப்படுத்தி விற்பனை செய்வதில் அதிக உழைப்பும், சிரமமும்  இருக்கிறது.

  • இதனால் மொத்த புத்தகத்தையும் விற்று, பணமாக மாற்றும் வரை அவரது இயல்பான படைப்பு ஆற்றலும் வேலையும் பாதிக்கப்படுகிறது. இது உளவியல் ரீதியான சோர்வுகளுக்கு வழிவகுகிறது என்பதே உண்மை.

3. டிஜிட்டல் வெளியீடு (Digital Publishing)

Ebook, Audio Book, NFT போன்ற முறைகள்.

நன்மைகள்:

  • இது உலகளாவிய அறிமுகம் மற்றும் விற்பனைக்கு வழிவகை செய்கிறது.

  • மற்ற இரு முறைகளை விட குறைந்த செலவு

  • புதிய தொழில்நுட்ப முறைகளை இதில் இணைப்பதால் எளிமை.

குறைபாடுகள்:

  • டிஜிட்டல் வெளியீட்டில் குறைபாடுகளே இல்லையா? என்றால் நிச்சயமாக குறை இல்லாமல் இல்லை. 

  • நவீன தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு புத்தகத்தையும் உருவாக்கி வெளியிட அதீத கற்றல் அவசியமாகிறது.

  • கவனமாக இல்லையென்றால்  இந்த முறை ஒவ்வொரு எழுத்தாளரையும் நிலைகுலையைச் செய்யும்  என்பதில் ஆச்சரியம் இல்லை.

  • சிறிய தவறும் எழுத்தாளரின் நன்மதிப்பை சிதைக்கும். 

  • முறையான அனுபவ அறிவும், தொழிநுட்ப அறிவும் இல்லையென்றால் உழைப்பும். பொருளும் நஷ்டப்படும் என்பது இந்த முறையில் சாத்தியம்.

அப்படியென்றால் எந்த முறையை தான் நான் பின்பற்றுவது என்றுதானே கேட்கிறீர்கள்? உங்களுக்கு உதவவே இந்த கட்டுரை. முழுமையாக படியுங்கள் தெளிவான, எளிமையான வழிகாட்டுதலை தருகிறேன்.

புத்தக பதிப்பு மற்றும் வெளியீட்டில் பின்பற்ற வேண்டிய முறைகள்

1.  உள்ளடக்கத்தை தயார் செய்தல்

  • உங்கள் கதையை முழுமையாக எழுதுங்கள்

  • இலக்கண மற்றும் மொழி சார்ந்த கதை சொல்லலை சரிசெய்யுங்கள்

  • வாசகர்களை ஈர்க்கும் வகையில் உங்கள் படைப்பின் உள்ளடக்கத்தை அமைத்துக் கொள்ளுங்கள். 

  • முக்கிய குறிப்பு:
    உங்கள் படைப்பின் உள்ளடக்கம் தான்….. உங்கள் புத்தகத்தின் உயிர்.

2.  தொகுப்பு (Editing)

  • இலக்கண மற்றும் எழுத்துப் பிழை திருத்தம்

  • கதை நகர்வை சரிபார்ப்பது.

  • தொழில்முறை தொகுப்பாளர் உதவி பெறலாம்.

3.  வடிவமைப்பு (Formatting & Design)

  • புத்தக அட்டைப்படம் (Cover Design)

    • புத்தகக அட்டைப்படத்தை தேந்தெடுப்பதில் இன்று பல்வேறு தவறுகளை எழுத்தாளர்கள் செய்வதை நாம் கண்கூடாக பார்க்கலாம். 

    • திரைப்படங்களில் வரும் காட்சிகளை அட்டைபபடமாக பயன்படுத்துவது, உங்கள் படைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும்.

    • பெரும்பாலான வாசகர்களை சென்றடைவதில் இப்படியான தேர்வு பெரும் தடைக்கற்களை ஏற்படுத்தும். 

    • நவீன தொழில்நுட்பம் இந்த குறைகளை களைவதில் பெரும்பங்காற்றுகிறது.

  • உள்ளமைப்பு (Layout)

    • கதையை கவனமாக அத்தியாயம் வாரியாக முடிவு செய்து, அதற்கேற்ப கதாப்பாத்திரங்களின் நகர்வுகள், காட்சி அமைப்புகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். 

    • கதை நகர்வுக்கு ஏற்ப வசனங்களை வடிவமைக்க வேண்டும். 

    • வெறும் வசனங்களின் கதைகளை நகர்த்தும் போக்கை தவிர்க்க வேண்டும். 

    • முழுமையாக காட்சிகளின் வர்ணிப்பில் கதை சொல்லும் விதமும் முற்றிலும் தவறானது.

  • வாசிப்பிற்கு ஏற்ற எழுத்துரு தேர்வு செய்தல். அதன் அளவு ஆகியவை இங்கே முக்கிய பங்காற்றுகிறது என்பதை மறக்க வேண்டாம்.

👉 நல்ல அட்டைப்படம் அதிக வாசகர்களை உங்கள் நூலுக்கு கொண்டு வரும் என்பதை மறக்க வேண்டாம். 

4.  ISBN பதிவு

ISBN (International Standard Book Number) என்பது புத்தகத்தின் அடையாள எண்.

👉 நவீன பதிப்பக துறையில் மிகவும் முக்கியமான விஷயம் இந்த ISBN எண் பெறுவதில் அடங்கியிருக்கிறது. இந்தியாவில் இது இலவசமாக கிடைக்கும். சிலர் ISBN பெற்றுத் தர அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை நம்பி ஏமாற வேண்டாம். எளிமையான வகையில் ISBN எண் பெறுவதை இந்திய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
👉 ISBN அதிகாரப்பூர்வ பதிவு நவீன பதிப்பக துறையில் மிகவும் அவசியமான காரணி என்பதை மறக்க வேண்டாம்.

5. புத்தக வெளியீட்டு முறையை தேர்வு செய்தல்

  • பாரம்பரிய வெளியீடு

  • சுய வெளியீடு

  • டிஜிட்டல் வெளியீடு

👉 உங்கள் தேவையைப் பொருத்து தேர்வு செய்வது அவசியம். தேவையை என்று சொல்வதை விட உங்கள் எதிர்பார்ப்பை பொறுத்து புத்தக பதிப்பு மற்றும் வெளியீட்டை முடிவு செய்யுங்கள். அதுவே சரியானது.

6. அச்சிடுதல் (Printing)

  • Print on Demand (தேவைக்கு ஏற்ப அச்சிடல்).

    • POD என்றழைக்கப்படும் இந்த முறையில் இன்று எளிமையாக நூல்களை அச்சிட்டு வெளியிடலாம். குறைவான எண்ணிக்கை என்ற வகையில் இது சாத்தியமானது என்றாலும், அடக்கச் செலவு என்ற விதத்தில் இது இயல்பை விட செலவு அதிகம் பிடிக்கும் என்பதே உண்மை. 

    • சில நேரங்களில் புத்தகத்தின் பக்கங்களை விட அடக்கச் செலவு அதிகம் வரும். 

    • இதனால் மொத்த விற்பனை விலையை நிர்ணயிப்பதில் சிக்கல் உருவாகும்.

  • Bulk Printing (மொத்த அச்சிடல்)

    • பரவலாக இந்த முறையையே நன்கு பரிட்சயமான, பாரம்பரிய, மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட பதிப்பகங்கள் பின்பற்றுகின்றன. 

    • இது அடக்கச் செலவை குறைகிறது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு விற்பனை மந்தமாக மாறும் பட்சத்தில் இருப்பில் நிறைந்து இருக்கும் என்பதும் மறுக்க முடியாதது. 

    • விற்பனையாகாமல் தேங்கும் நூல்களை பாதுகாப்பதும், அதனால் உருவாகும் பொருளாதார முடக்கமும் நம் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடலாம்.


7.  விநியோகம் (Distribution)

  • ஆன்லைன் (Amazon, Flipkart)

    • நவீன யுகத்தில் மேற்படி தளங்களில் புத்தகங்களை விற்க உபயோகிக்கப்படும் முறை. 

    • இந்த தளம் மூலம் ஆயிரக்கணக்கில் நூல்களை விற்றுவிடலாம் என்ற தவறான எண்ணத்தில், நிறைய பேர் அதிக எண்ணிக்கையில் புத்தகங்களை அச்சடித்து ஏமாறும் நிலை இருக்கிறது. 

    • இந்த தளங்கள் மூலம் புத்தக விற்பனை நிகழும் என்பது மறுக்க முடியாத உண்மை என்ற போதும்… டிஜிட்டல் வணிக முறையில் இந்த தளங்கள் மூலம் நூல் விற்பனை செய்வதில், நடைச்முறை சிக்கல்கள் நிறைய இருக்கிறது. 

    • உதாரணத்துக்கு… உங்களிடம் GST இல்லையென்றால்… உங்களால் இந்த தளங்களில் நூல்களை விற்பனை செய்ய இயலாது. GST வரி செலுத்தாமல் நீங்கள் இந்த முறையில் விற்பனையை நீங்கள் விரிவாக்கம் செய்வதும் சாத்தியாயமற்றது. 

    • இந்த தளங்களுக்கு கொடுக்கப்படும் மார்ஜின் அளவு 30-45 சதவீதம் வரை இன்று உயர்ந்துள்ளது. 

    • சமீபத்திய நிலை இதை மேலும் மோசமாக்கி இருக்கிறது. சில தளங்கள் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகினறன என்பதால், இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் நிலைக்கு ஆளாகின்றன. ஆகவே அமெரிக்க வரி சான்றிதழை பெற்று வழங்கும் படி நிர்பந்திக்கப்படும் நிலை இருப்பது கவனத்தில் கொள்ளவேண்டும்.


  • உள்ளூர் புத்தக கடைகள்

    • உள்ளூர் புத்தகக்கடைகள் மூலம் புத்தகங்களை விற்பதை பரவலாக எல்லா பதிப்பகங்களும் நடைமுறைப்படுத்துகினறன. 

    • ஆனால் புத்தக விற்பனையாளர்கள் புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களை விற்பனைக்கு ஏற்காமல் புறக்கணிக்கும் நிலை நீடிக்கிறது. 

    • புத்தகத்துக்கான பணம் வழங்குவதில் 40 நாட்கள் வரை வட்டியில்லாத கடன் கொடுக்கும் நிலை பதிப்பகங்களுக்கு அதிகார பூர்வமற்ற நிலையில் இருப்பதை மறுக்கவும் முடியாது.

  • சொந்த வலைத்தளம்

    • பலரும் இன்று சொந்த வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள். 

    • இது சாத்தியமானது என்றாலும், பரவலாக்கம் என்ற வகையில் இது பெரிய விற்பனைக்கு வழிவகுக்கிறதா என்ற கேள்வி இருப்பதை மறுக்கவும் முடியாது. ஆனாலும் சொந்த வலைத்தளம் மூலம் விற்பனை சாத்தியமானது தான்.

படி 8: விளம்பரம் (Marketing)

  • சமூக ஊடகம் (Facebook, Instagram)

  • YouTube, WhatsApp

  • வாசக குழுக்கள்.

👉நவீன யுகத்தில் மார்க்கெட்டிங் செய்யாமல் புத்தகங்களை விற்பனை செய்வது இயலாது. புத்தக கண்காட்சிகள் மூலமாக புத்தகங்களை விற்பனை செய்ய தமிழக அரசும், பபாசி நிறுவனமும் உதவுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்டு தோறும் புத்த கண்காட்சிகள் மூலம் விற்பனையாகும் நூல்கள் சமீபத்தில் சற்று உயர்ந்து இருக்கிறது என்பது உண்மை. என்றாலும் சிறிய பதிப்பகங்களுக்கு இது சாத்தியமானதா என்ற கேள்வி இங்கு எழாமலும் இல்லை. 

புத்தக வெளியீட்டின் செலவு (Cost Breakdown)

செயல்பாடு

தோராய செலவு 

தொகுப்பு

₹3,000 – ₹15,000

அட்டைப்படம்

₹2,000 – ₹10,000

மார்க்கெட்டிங்

நூலுக்கு நூல் மாறுபடும்


புதிய எழுத்தாளர்களுக்கான முக்கிய குறிப்புகள்

  • புதிய பதிப்பகங்கள் எழுத்தாளர்கள் சிறியதாக தொடங்குங்கள்

  • தரமான உள்ளடக்கம் உருவாக்குங்கள்

  • வாசகர்களுடன் தொடர்பில் இருங்கள்

  • டிஜிட்டல் தளங்களை பயன்படுத்துங்கள்

தமிழ் பதிப்புலகத்தின் எதிர்காலம்

இன்றைய உலகில், டிஜிட்டல் வெளியீடு, ஆடியோ புத்தகங்கள், மற்றும் Book NFT போன்ற புதிய தொழில்நுட்பங்கள் தமிழ் இலக்கியத்தை உலகளாவிய அளவில் கொண்டு செல்கின்றன.

👉 இது புதிய எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு.


விதைகள் பதிப்பகத்தின் பங்களிப்பு:

  • விதைகள் பதிப்பகம் நவீன ஊடக வளர்ச்சி, தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக செயல்படுகிறது. 

  • அறிமுக எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்கள் படைப்புகளின் தரத்தை ஆய்வு செய்து, தேவையென்றால் பயிற்சி கொடுத்து அவர்கள் படைப்பை சுதந்திரமாக வெளியிட உதவுகிறது. 

  • டிஜிட்டல் முறையில் எழுத்தாளர்களின் படைய்ப்புகளை அதிக பார்வையாளர்களை, வாசிப்பாளர்களை கண்டறிந்து கொண்டு வர தேவையான சந்தையிடுதலை விதைகள் பதிப்பகம் ஆக்கபூர்வமாக செய்து தருகிறது. 

  • எழுத்தாளர்களுக்கு அவர்களின் படைப்புக்கேற்ற ராயல்டியை உருவாக்கிக் கொடுப்பதில் நாங்கள் பெரும் பங்காற்றுகிறோம்.

  • நவீன உத்திகள் மூலமாக வாசகர்களை கவரவும், அவர்களை எழுத்தாளருடன் இணைப்பதிலும், விதைகள் பதிப்பகம் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்து வருகிறது. 

  • எங்கள் இணையதளம் மூலமாக எழுதவும், படைப்புக்களை டிஜிட்டல் வடிவில் பதிப்பிக்கவும் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறோம்.

  • ஆண்டுதோறும் இலக்கிய போட்டிகள் நிகழ்த்தி, எழுத்தாளர்களை ஊக்குவிப்பது, அவர்களின் படைப்புக்களை பதிப்பிக்க உதவுவது போன்ற காரியங்களை செய்வதில் விதைகள் பதிப்பகம் முழு வீச்சில் எவ்வித கட்டணமுமின்றி செயலாற்றுகிறது.

  • எழுத்தாளர்களுக்கு பயிற்சி அளிப்பது, ISBN குறியீடுகளை பெறுவது, காப்புரிமை சார்ந்த செயல்பாடுகளில் விதைகள் பதிப்பகம் கவனம் செலுத்துகிறது.

  • எழுத்தாளர்கள் சிறந்த வருவாயை பெறுவதிலும், நீண்டகாலம் இலக்கிய பணியில் தொடர்வதிலும் நிலைக்க… விதைகள் பதிப்பகம் தூணாகவும், அரணாகவும் இருக்கிறது. 

முடிவு

தமிழ் இலக்கிய உலகத்தில் ஒரு புத்தகத்தை வெளியிடுவது இனி சாத்தியமற்ற கனவு அல்ல. சரியான வழிகாட்டல், திட்டமிடல், மற்றும் முயற்சி இருந்தால், உங்கள் கதை உலகம் முழுவதும் செல்லும்.

ஒரு நல்ல புத்தகம் ஒரு தலைமுறையை மாற்றும். உங்கள் படைப்பை தலைமுறை கடந்தும் நிலைக்க வைக்க விதைகள் பதிப்பகமும் உங்களுக்கு பக்க பலமாக இருக்கும். 

இந்த கட்டுரை பற்றிய கருத்துக்களை மறக்காமல் கீழே கமெண்டில் சொல்லுங்கள். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள, எங்கள் காண்டாக்ட் பக்கத்தில் இருக்கும் பாரத்தை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்புங்கள். இந்த கட்டுரையை பிறருக்கும் பகிருங்கள். 

எங்கள் பதிப்பகத்தை பின்தொடர இணைப்பில் இருக்கும் பாரத்தை பூர்த்தி செய்து சமர்ப்பியுங்கள்.

Comments

I R Caroline said…
அருமை சகோ. புதிய எழுத்தாளர்களுக்கு நல்ல வழிகாட்டுதல்.

Popular posts from this blog

காதலர் தின சிறப்புக் கட்டுரை