Posts

முன்னோட்ட காணொளிகள்

Image
எங்கள் நாவல்கள் குறித்த காணொளிகளை இங்கே கொடுத்து இருக்கிறோம்.  காற்று வெளியிடை கண்ணம்மா (புதிய நெடும் தொடர்) மணிமான் மைந்தன் (இதிகாச புனைவு நாவல்) தீம்புனல் தாரகை   கிரேக்க மணிமகுடம் 

அறிவிப்புகள்

Image
 விரைவில்....  விதைகள் பதிப்பகத்தின் மற்றுமொரு மாறுபட்ட படைப்பே இந்த நாவல். காதல் இல்லாத ஜீவராசிகள் இந்த உலகத்தில் இறைவனால் படைக்கப்படவே இல்லை. எல்லா உயிர்களும் காதலில் மகிழாமல் வாழ்வை கடக்க முடியாது. சிலருக்கு காதல் கைகூடி நீண்ட நிம்மதியான, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வாக அமைகிறது. பலருக்கும் காதல் என்பது தொடக்கத்தில் இன்பமாகவும், மறுபாதியில் துன்பமாகவும் மாறி, அனுதினமும் நரகத்தை பரிசாக தரும் நிலையும் நடைமுறை வாழ்வில் இருக்கிறது.  ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ எழுத்தாளர் பாரதிப்பிரியனின் எண்ணத்தில் உதித்த ஒரு மெல்லிய காதல் கதை. ஒரு எழுத்தாளராக, குரல் கலைஞராக அவர் எதை நேசித்து செய்தாரோ? அதையே கதைக்களமாக உருவாக்கி இருக்கிறார் என்றே கூறலாம். ஒரு எழுத்தாளர் தன் முப்பது வருட காதல் வாழ்க்கை-யை நேரலையில் தன் நேயர்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும் சொல்லி முடிப்பதே இந்த நாவலின் ஒரு வரி கதை என்றாலும் அதை நேர்த்தியாக வாசகர்கள் விரும்பும் வண்ணம் காட்சிகளாக விரித்து அவர்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் படியாக, அபாரமான எழுத்து நடையை ஆசிரியர் கையாண்டு இருக்கிறார். நாவலின் ஒரு வரியைக் கூட நீ...

தீ….தீ….தித்திக்கும் தீ….. (கருவறை களவுகள்) அத்தியாயம் - 2

Image
  தீ….தீ….தித்திக்கும் தீ….. (கருவறை களவுகள்) அத்தியாயம் - 2 இருளை மெல்ல மெல்ல விரட்டியபடி கதிரவன் கடலுக்குள் இருந்து எழுந்து வரும் இனிய காலை நேரம்….. சென்னையில் பிரீத்தி - குகேஷ் பிறந்து வளர்ந்த பூர்வீக வீட்டில் சுப்ரபாதம் ஒலிக்கத் தொடங்கியது. பூஜை அறையில் விளக்குகளை ஏற்றிவிட்டு, தூபம் காட்டியபடி ஈரத்துவாலையை தலைக்கு கட்டிக் கொண்டு வெளியே வந்தாள். அப்போது தான் உறக்கம் கலைந்து திரும்பிப் படுத்த வினித் முகத்தின் மீது சடாலென்று ஒரு ஜோடிக் கால்கள் வந்து விழுந்தன.  “ஆஆஆஆ… அடேய்! ஏண்டா இப்படி படுத்தறே? அங்கிட்டு திரும்பி காலை போடக் கூடாதா? மூக்கே போச்சு” என்றவாறே, முகத்தின் மீது காலை போட்டுக் கொண்டு உறங்கிய தன் மகனை பார்க்கும் மைத்ரேயனை கவனித்தபடியே அறைக்குள் வந்தாள் ரூபா, அவன் நிலை கண்டு ஒரு நமட்டு சிரிப்பை உதிர்த்தவாறே…. “என்ன மைதா டார்லிங்! இன்னும் தூக்கம் கலையலயா? இப்படியே நீ தூங்கிட்டு இருக்கக் கூடாதுன்னு தான் என் பையன் உன்ன எழுப்பி விட்டு இருக்கான். அதுக்கு எதுக்கு பையனை காலையிலேயே திட்டற?”  அவளை ‘வெறிக்க ஒரு நொடி பார்த்தவன் பின் இலேசாகி….’  “இப்படி எல்லாம் கா...

தீ….தீ….தித்திக்கும் தீ….. (கருவறை களவுகள்) அத்தியாயம் - 1

Image
  தீ….தீ….தித்திக்கும் தீ….. (கருவறை களவுகள்) அத்தியாயம் - 1 “ஹாய் செல்லம்ஸ்! எப்படி இருக்கீங்க மச்சான்ஸ்? இது என்னோட புது ட்ரெண்டி நைட் கவுன் எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க! அப்படியே இந்த ட்ரெஸ்ல நான் எப்படி இருக்கேன்னு ரெண்டு மூணு வார்த்தை மறக்காம சொல்லுங்க! நைட் முடிஞ்சா லைவ்-ல வர்றேன்…. செம ஹாட்டா பேசிக்கலாம். என்னோட பர்சனல் வீடியோ லிங்க்-கை கண்டிப்பா சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க அப்பத்தான் என்னோட பர்சனல் லைவ் ஸ்ட்ரீமிங் நீங்க பார்க்க முடியும்…. பை! செல்லம்ஸ்….”  ‘ஹஸ்கி வாய்ஸில் விஸ்கி லுக்கில், வீடியோவை பதிவு செய்து எடிட்டிங் செய்யத் தொடங்கிய பெண்ணுக்கு 28 வயது இருக்கக் கூடும். சமூக வலைத்தள மோகத்தில் மூழ்கி அதில் உச்சம் தொடவேண்டும் என்ற பேரார்வம், அவளுக்குள் ஆர்ப்பரித்து பொங்கி பிரவாகித்ததை, அவள் பதிவு செய்த வீடியோ அப்பட்டமாக வெளிப்படுத்தியது’.  ‘வீடியோவை பதிவேற்றம் செய்தவள் முகத்தில் உச்சபட்ச திருப்தி தென்பட்டது. அவள் பதிவேற்றம் செய்த வீடியோவை, அடுத்த நொடியில் இருந்தே ஆயிரக்கணக்காண பாலோயர்ஸ் காணத் தொடங்கியிருந்தார்கள்’.  அதே நேரம்….. விசாகப்பட்டினம் துறைமு...