தீ….தீ….தித்திக்கும் தீ….. (தொடர்கதை) அத்தியாயம் - 4

  • 📌 Topic Summary: உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இருட்டு மனிதர்கள் யார்?  

  • யாருக்கு புதிய மகுடம் சூடப் போகிறார்கள் ?  
  • ஏற்காடு மலையடிவாரத்தில் வீசப்பட்ட மூட்டையில் என்ன இருக்கிறது? 
  • நடந்த விபத்து உண்மையா? அல்லது திட்டமிட்ட “எக்ஸிக்யூஷனா”? 
  • படப்பிடிப்பு நடக்கிறது என்ற பெயரில் யாராவது உண்மையை மறைக்கிறார்களா?
  • ஒரு ஆம்புலன்ஸ் ஏன் அதே இடத்தில் ஒரு பெரிய மூட்டையை டிஸ்போஸ் செய்கிறது?



தீ….தீ….தித்திக்கும் தீ…..

அத்தியாயம் - 4



“ம்ம்மா… ம்ம்ம்மா….” என்று தொட்டிலில் கிடந்த மழலை அழவே, வேகமாக எழுந்து வந்த தொட்டிலை பிரித்து உள்ளே பார்த்தாள். கண்களில் திரண்டு வழிந்து கொண்டிருந்த நீரும், இயற்கையாக வெளியேறிய நீரும் கொடுத்த ஒவ்வாமை முகத்தில் படர்ந்திருந்ததை புரிந்து கொண்ட வேகமாக தன் மகளை தொட்டிலில் இருந்து வெளியே தூக்கினாள். 


“அச்சச்சோ…. கண்ணு குட்டி சுச்சு போயிட்டிங்களா? ஈரம் தங்கத்துக்கு புடிக்கலையோ? சரிடா… சரிடா… மாத்திடலாம்” என்றபடியே அறையின் வாசலை நோக்கி, “மைதா! கொஞ்சம் இங்க வாயேன்! உன்னோட பொண்ணு உன்ன கூப்பிடறா” என்று கூறினாள். குகேஷுடன் பேசிக் கொண்டிருந்த வினித் சைலேஸ்வரி குரலைக் கேட்டு, எழுந்து அறைக்குள் வந்தான். 


அங்கே தன் மகள் அழுது முடித்து அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டு வாயில் ஆள்காட்டி விரலை நுழைத்தபடி இருப்பதை பார்த்துக் கொண்டே குழந்தையுடன் நிற்கும் ரூபா வை நெருங்கினான். 


“மைதா! உன்னோட செல்ல பொண்ணு சுச்சு போயிருக்கா! அவ பேண்டீசை கழட்டிட்டு, வைப்பர் வெச்சு தொடச்சு விடு. நான் வேற பேண்டீஸ் எடுக்கறேன். அப்புறமா இதோ தூளி எல்லாம் ஈரமா இருக்கு. மேடம் அதுல படுக்க மாட்டாங்க. அப்படியே கொஞ்சம் தூளியை கொஞ்சம் மாத்தி குடுத்துடு. கையோட இந்த….” என்று சொல்லிக் கொண்டே போனவளை கொஞ்சம் கோப்பட்டதோடு பார்த்துக் கொண்டே கையமர்த்தியவன்….


“கீழ ஆகி இருக்கற ஈரத்தை துடைச்சு சுத்தம் பண்ணனும் அவ்வளவுதான! செய்யறேன்… செஞ்சு தொலைக்கறேன்” என்று கூற அவனை பார்த்து இலேசாக சிரித்துக் கொண்டே உதட்டை கடித்துக் கொண்டு நகர்ந்த ரூபா வை முறைத்தவன் கன்னத்தில் ‘சப்’என்று தன் பிஞ்சு விரலால் ஒரு அடி கொடுத்தது மழலை. திடுக்கிட்டவனை இப்போது நன்றாக பார்த்து சிரிக்கவும் செய்த குழந்தையின் முகத்தையே பரிதாபமாக பார்த்தான் மைத்ரேயன். 


அதற்குள் அறைக்குள் நுழைந்தான் குகேஷ். வினித் குழந்தைக்கு உடை மாற்ற முயல்வதை கண்டவன், வேகமாக சென்று குழந்தையை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டே…


“மாம்ஸ் இருங்க! நான் ஹெல்ப் பண்ணறேன். கூப்பிட்டு இருக்க கூடாதா? நான் வந்து இருப்பேன் இல்ல” என்று அன்போடு கூறினான். 


“எங்க மாப்பிள்ளை? இங்க குழந்தைங்க விஷயத்துல எல்லாமே நான் தான். உங்க அக்கா இருக்காளே எதுனாலும் என்ன கோர்த்து விட்டுட்டு ஓரமா போய் நின்னுக்குவா” என சொல்லி முடிக்கும் முன் ஷாலு அவர்கள் உரையாடலில் கலந்தாள். 


“மைதா! ராகுல் பொறக்குறப்பவும், வர்ஷா வயித்துல இருக்கறப்பவும் நீ என்ன சொன்னன்னு மறந்துடுச்சா செல்லம்? திரும்ப வேணும்னா நான் உனக்கு ஞாபகம் பண்ணட்டுமா? என்பதற்குள் வினித் அவளை கையெடுத்து கும்பிட்டான். அவனை பார்த்து, “அந்த பயம் இருக்கட்டும்” என்று கூறிவிட்டு சிரித்தாள். அவர்கள் எதைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள் என்று புரியாத குகேஷ் குழந்தையை தன் நெஞ்சோடு அணைத்து பிடித்துக் கொள்ள, மைதா ஈரமான பேண்டீசை கழட்டிவிட்டு வைப்பர் வைத்து துடைக்கத் தொடங்கினான். 


சைலேந்தரியிடமிருந்து பேண்டீசை வாங்கி குழந்தைக்கு மாட்டிவிட முயன்ற நேரத்தில் அவனை குகேஷ் தடுத்தான். 


“மாம்ஸ் ஒரு நிமிஷம். கொஞ்சம் பவுடர் அப்பளை பண்ணி விட்டுட்டு ட்ரெஸ் போட்டு விடுங்க. ஈரத்தோட உடனே ட்ரெஸ் போட்டு விட்டா பாப்பாக்கு சம் டைம்ஸ் ரேஷஸ் வர சான்ஸ் இருக்கு” என அக்கறையுடன் பேச, மைத்ரேயனும், சைலேந்தரியும் ஒரே நேரத்தில் வியப்பில் வாயை பிளந்தார்கள். 





அவனை ஆச்சரியம் விலகாமல் பார்த்தபடியே,


“டேய் தம்பி! இதெல்லாம் எப்படிடா உனக்குத் தெரியும்? நீ சாப்ட்வேர் படிச்சன்னு தான நெனச்சுட்டு இருக்கோம். ஏதோ மேல் நர்ஸ் சொல்லற மாதிரி இல்ல டீடைலிங் குடுக்கற. இல்ல எங்களுக்கு எல்லாம் சொல்லாமலே…. லண்டன்லயே ஏதாவது வெள்ளைக்காரிக்கு மோதிரம் மாத்தி, குழந்தை ஏதாவது….” என்று இழுக்க… 


சிரித்துக் கொண்டே அதை அவசரமாக மறுத்தான் குகேஷ். 


“இதுக்கு எல்லாம் கொஞ்சம் காமன் சென்ஸ் போதும்க்கா! இதுக்கு போய் பி.எச்.டி யா படிச்சுட்டு வருவாங்க. குழந்தை பராமரிப்புங்கறது ஆட்டோமெட்டிக்கா எல்லாருக்குமே வர்ற காமன் கலைதான் அக்கா! இது எல்லாரோட ஜீன்லயும் இயற்கையாவே இருக்கும்” என்று பெரிய மனிதன் தோரணையில் பேச… வினித் குகேஷ் மேல் அதிகமாக இம்ப்ரெஸ் ஆகி போனான். வாயடைத்து நின்றாள். 


அப்போது அலைபேசி ஒலிக்க… ஸ்கிரீனில் தெரிந்த பேயரைப் பார்த்ததும் பரவசமாகி, அழைப்பை உடனே ஏற்றபடியே ஹாலுக்கு சென்றாள். 


“சொல்லுங்க சி.பி.ஐ ஆபீசர் பொண்டாட்டி…. எப்படி இருக்கீங்க? விஷு குட்டி எப்படி இருக்கா?” என்றபடியே சந்தோஷத்தில் திளைக்க பேசினாள். எதிர்முனையில் இருந்த பிரீத்தி விடமும் அதே மகிழ்ச்சி இருந்ததை உணர முடிந்தது. 


“நான் நல்லா இருக்கேன் ரூபா ! குடிசுங்க எப்படி இருக்காங்க? விஷு நல்லா இருக்கா அடிக்கடி உன்னையையும் மைதா-வையும் பத்தி தான் பேசுவா” என பதில் கொடுத்தாள் பிரீத்தி . 


பொதுவான விசாரிப்புகள், குடும்ப நலன்கள் குறித்து இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, வினித் அறையை சுத்தம் செய்து முடித்திருந்தான். அதே நேரம் குகேஷ் குழந்தையின் தொட்டில் துணியை மாற்றினான். குகேஷ் தோளில் தலை சாய்த்தபடியே குழந்தை உறங்கவும் செய்திருந்தது. இருவரும் ஹாலுக்கு வரும் நேரத்தில், சைலேந்தரிக்கு குகேஷ் குறித்த நினைவு வரவே அவள் அதை பிரீத்தி வுக்கு சொல்லத் தொடங்கினாள். 


“அக்கா! லண்டன்ல இருந்து குகேஷ் திரும்பி வந்து இருக்கான். உமா சித்தி இறந்தப்ப சித்தப்பா அவனை வலுக்கட்டாயமா கூட்டிட்டு போனதுக்கு அப்புறமா இப்பத்தான் நம்மள எல்லாம் பார்க்கணும், நம்மகூடவே இருக்கனும்ன்னு சொல்லி தேடி வந்து இருக்கான். குட்டி பையனா நீ பார்த்து இருப்ப இல்ல. இப்ப பார்த்தா நீயே அசந்து போயிடுவே! அவ்வளவு வளர்ந்து, ஆளே ஹாண்ட் சம்மா மாறிட்டான்” வார்த்தைகளில் அன்பையும் பாசத்தையும் கலந்து சொல்ல பிரீத்தி  உணர்ச்சி வசப்படுவது அவள் குரலில் தெரிந்தது. 


“ரூபா ! குகேஷ் திரும்ப வந்து இருக்கான்னு நீ சொன்னதும் எனக்கு தலை கால் ஓட மாட்டேங்குது. அந்த குட்டிக் பையனுக்கு நம்ம மேல எவ்வளவு பாசம் இல்ல. நம்மள தேடி ஓடி வந்துட்டான் பாரேன்! ஹே… ஹே… அவன்கிட்ட போனை குடு! எனக்கு அவன்கிட்ட பேசணும்” படபடப்பும் பேரன்பும் கலந்து யுகா சொல்ல… 


“இருக்கா ஒரு நிமிஷம்” என்ற படியே மொபைலை குகேஷிடம் நீட்டிய சைலேந்தரி… “குகேஷ் இந்தா… உன்கிட்ட உன்னோட பாசக்கார அக்கா பேசணுமாம்”. 


சில நொடிகள் யார் என்று குகேஷ் குழம்பினான் என்றாலும், நெருப்பு போல தன்னோடு பேச விரும்பும் நபரை புரிந்து கொண்டான். அவன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் ஒளிர்ந்தது. போனை வேகமாக சைலேந்தரியிடமிருந்து வாங்கிக் கொண்டவன் படபடக்கும் இதயத்தோடு….


“பிரீத்தி அக்கா….” என்று கூறிய நொடியே எதிர்முனையில் பிரீத்தி  ஐஸ் கட்டியாக கரைந்தாள். 


“செல்ல குட்டூஸ்! சக்கரை பையா…. எப்படிடா கண்ணா இருக்கே?” என்ற பிரீத்தி  குரலில் குகேஷ் கண்கள் கலங்கி போனது. அவனையும் அறியாமல் நாதழுதழுக்க பேசலானான். 


“ம்ம்ம்ம்…க்கா! நல்லா இருக்கேன்! நீங்க எப்படி இருக்கீங்க? எப்ப சென்னைக்கு வருவீங்க?” என்றவன் தோளை அழுத்திப் பிடித்து தேற்றினாள் ரூபா . அவள் முகத்தில் குகேஷ் மற்றும் யுகா இடையேயான அன்பின் மீதான பெருமிதம் மிளிர்ந்தது. 


“நான் நல்லா இருக்கேண்டா சக்கரை! சீக்கிரமா சென்னைக்கு வருவோம்டா… நீ வந்துட்ட இல்ல! இனி நான் இங்க எங்க இருக்க போறேன். மாமாகிட்ட கேட்டுட்டு உடனே கிளம்பி வந்துடறேன். ஹே… ஒன் செகண்ட். நாம ஏன் வாய்ஸ் கால்ல பேசிட்டு இருக்கோம். இரு நான் வீடியோ கால்ல வர்றேன்” என்று அவசரமாக இணைப்பை துண்டித்த பிரீத்தி  அடுத்த நொடியே வீடியோ காலில் வர… அக்காவை பார்த்து குகேஷ் மகிழ்ச்சியில் துள்ளினான். இருவரும் அன்பை பரிமாறி மகிழ்வதை மைத்ரேயனும் சாண்ட்ரா யும் பார்த்து ஆச்சரியம் கலந்த பேருவகை கொண்டார்கள்.


இங்கே குடும்ப அன்பின் பரிணாமம் வளர்ந்து கொண்டிருக்க… இருட்டறை ஒன்றில் சிண்டிகேட் ஒன்று கூடியிருந்தது. இரகசிய சிண்டிகேட் உறுப்பினர்கள் பல நாடுகளில் இருந்தும் வீடியோ காலில் இணைந்திருந்தார்கள். அவர்கள் விவாதம் விரிவாக இல்லாமல் குறியீட்டு வார்த்தைகளாக இருந்தது. முகங்களுக்கு பதிலாக அவர்கள் கொடிகளை உபயோகித்து இருந்தார்கள்.


யூரோப்பை சேர்ந்த ஒருவன் தான் முதலில் பேசத் தொடங்கினான். 


“டியர் சிண்டிகேட் மெம்பர்ஸ்! புது கிரவுன் நம்ம சிண்டிகேட்க்கு கொடுக்க முடிவாகி இருக்கு. ரெட் போர்ட்-ல இருந்துதான் புது கிரவுன் செலெக்ட் பண்ணி இருக்கோம். அடுத்த மீட்ல புது கிரவுன் சார்ஜ் எடுத்துக்குவாங்க” என சொல்லி முடிக்க… மற்ற உறுப்பினர்கள் அதை ஆமோதிக்கும் விதமாக கிளாப்ஸ், ஹார்டின் எமோஜிகளை பறக்க விட்டார்கள்.


“மத்திய தரைக்கடல் பகுதிக்கு இன்னமும் மெட்டீரியல் வந்து கிடைக்கல கிரவுன். எக்ஸ்பெக்டட் டேட் கூட கடந்து போச்சு! எதனால இந்த டிலே? இங்க டிஸ்ட்ரிபூட்ர்ஸ் ரொம்ப பிரஷர் கொடுக்கறாங்க” என்ற நொடியே… கிரவுனாக இருந்த குரல் அழுத்தம் திருத்தமாக பதில் கூறியது. 


“மெம்பர்! மெட்டீரியல் இப்பத்தான் ஹார்பர்ல வந்து இறங்கி இருக்கு. உங்க ஆளுங்களை அனுப்பி உடனே ஷேபா கொண்டுட்டு வர சொல்லுங்க. இது இயற்கையால உண்டாகற டிலே. செயற்கையாக ஆகற டிலேயையே பொறுத்துக்கறாங்க. இயற்கையா உண்டாக்குற டிலேயை பொறுத்துக்க முடியாதா? டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பேச அளவுக்கு எல்லாம் இடம் கொடுக்க கூடாது மெம்பர். பேசறவனை கடல்ல இறக்கி விட்டுடனும். யூ காட் மை பாயிண்ட்!” ஆத்திரம் இல்லாத… ஆனால் அழுத்தமான மிரட்டலை உதிர்த்த கிரவுன் வார்த்தையால், ஆடிப் போன மெம்பர்கள் அதை ஒப்புக் கொண்டதற்கு அடையாளமாக… தம்ஸ் அப்-களை அள்ளி வீசினார்கள். மானிட்டரில் தம்ஸ் அப் நிறையும் நேரத்தில்… 


சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் சாலையில் ஏறக்குறைய மலையடிவாரத்தின் அருகே ஒரு ஆம்னி வேன் கிரீச்சிட்டு நின்றது. அதன் பக்கவாட்டு கதவுகள் சர் என்று திறந்த அடுத்த நொடியே… ஒரு பிளாஷ்டிக் மூட்டை தள்ளிவிடப்பட்டது. அடுத்த நொடி அந்த ஆம்னி வேன் அரைவட்டமடித்து திரும்பி, சேலம் நகரை நோக்கி வேகமாக செல்லத் தொடங்கியது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த மனிதனுக்கு 55 வயது இருக்கும். முகத்தில் ஆறேழு நாளாக சவரம் செய்யாததால் ஏற்பட்டிருந்த தாடி, வெள்ளையும் கறுப்புமாக காட்சி தர… கண்களில் போதை கொடுத்திருந்த சிவப்பும், குரூரம் நிறைந்த பெரும் தீயும் கலந்திருந்தது. 


அவனது வாகனம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் செரி ரோடை நோக்கித் திரும்பிய நேரத்தில், இடது புறத்திலிருந்து வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி மோதியதில், ஆறேழு கரணம் அடித்து சென்று ஓமலூர் சாலையில் விழுந்து குப்பென்று தீ பற்றி எரியத் தொடங்க… 


லாரியை ஓட்டி வந்தவன், அங்கேயே லாரியை விட்டு விட்டு, பின்னால் வந்த பைக்கின் பின் சீட்டில் ஏறி அமர்ந்து காற்றாக காணாமல் போனான். மலையடிவாரத்தில் ஆம்னியிலிருந்து வீசப்பட்ட பொருள் என்ன? எதற்காக இந்த விபத்து நாடகம்? ஆம்னியை ஓட்டியவன் யார்? வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் குரல் ஒலித்து முடித்த உடனேயே…. 


“டேக் ஓவர்…. கட்” இயக்குனர் சீட்டில் அமர்ந்திருந்தவன் சொல்ல… காட்சியை வடிவமைத்த சண்டை மாஸ்டர் தீப்பொறி தியாகு மகிழ்ச்சியுடன் இயக்குனரை நோக்கி வந்தார். அதற்குள் துணை நடிகர்கள் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த துணை நடிகரை பத்திரமாக அதிலிருந்து வெளியேற்ற தொடங்கியிருந்தார்கள். ‘குற்ற கூடாரம்’ சீரியலுக்கு நடந்த படப்பிடிப்பை காண நிறைய பேர் அங்கே கூடியிருந்தார்கள். 


ஆனால்…. உண்மையிலேயே ஏற்காடு மலையடிவாரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் ஒரு பெரிய மூட்டையை டிஸ்போஸ் செய்து கொண்டிருந்தது.  





தொடரும்.......................................


இந்தக் கதை உங்களுக்கு பிடிச்சு இருந்தா மத்தவங்களுக்கும் ஷேர் பண்ணுங்க! எங்களோட வேற கதைகள் கட்டுரைகளை கீழே இருக்கற link கிளிக் பண்ணி ஒப்பன் பண்ணி படியுங்க! மறக்காம கமெண்ட் பண்ணுங்க. அது எங்களை இன்னமும் சிறப்பா செயல்பட தூண்டுதலா இருக்கும். 





https://www.vithaigalpathipagam.com/2026/02/blog-post_19.html.    


https://www.vithaigalpathipagam.com/2026/02/2_51.html 


https://www.vithaigalpathipagam.com/2026/02/2_14.html



Comments

Popular posts from this blog

காதலர் தின சிறப்புக் கட்டுரை