தீ….தீ….தித்திக்கும் தீ….. (கருவறை களவுகள்) அத்தியாயம் - 5
டெல்லி குளிரில் காதல் சூடாகிக் கொண்டிருக்கையில்… கவின் – ப்ரீத்தியின் உறவில் எந்த மாற்றம் உருவாகப் போகிறது?
இன்பத்தில் மூழ்கிய ஒரு காலை… அவர்களின் வாழ்க்கையை புரட்டி போடப்போகும் இருண்ட நிழல் நெருங்கிக் கொண்டிருக்கிறதா?
மாடிமீது தொடங்கிய ஒரு சின்ன வீடியோ ஷூட்… மாமியார் – மருமகள் மோதலாக மாறியது ஏன்?
ரோஹித்தின் மரணம் ஒரு எச்சரிக்கை மட்டும் தானா?
‘சல்மான்’ என்ற புதிய தலைவன் — சிங்கமும் யாளியும் சேர்ந்த ஆளா?
ரூபாலி வர்மா மீது சிண்டிகேட்டின் கோபம் — காரணம் என்ன?
சல்மான் கையில் சர்ஜரி நைப்… ரூபாலியின் இறுதி முடிவு என்ன?
மரணம் உண்மைகளை மறைக்குமா? அல்லது வெளிக்கொணருமா?
தீ….தீ….தித்திக்கும் தீ…..
(கருவறை களவுகள்)
அத்தியாயம் - 5
கதிரவனின் கனல் டெல்லியை ஆக்கிரமிக்க அச்சம் கொண்டிருந்த பனி காலத்தின் விடியலில், சீப்-பை பார்க்க வேண்டிய அவசரத்தில் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான் கவின் சாகித்தியன். உறக்கத்திலிருந்து இன்னமும் விடுபட மனமின்றி போர்வைக்குள் முடங்கிக் கிடந்த பிரீத்தி ‘அருகில் கவின் இல்லை’ என்பதை உணர்ந்தவளாக கண்விழித்து மெல்ல அறைக்குள் பார்வையை சுழலவிட்டாள்.
ட்ரெஸிங் ரூமில் அவன் கிளம்பிக் கொண்டிருப்பதை பார்த்தவள், மெல்ல எழுந்து அமர்ந்தவாறே…. அவனைப் பார்த்து காதல் கலந்த புன்னகை ஒன்றை வீசியவள், படுக்கையை விட்டு எழுந்து அவன் பின்னால் சென்று அவன் முதுகைக் கட்டிக் கொண்டு உஷ்ண பெருமூச்சை அவன் பின் கழுத்தில் செலுத்தி முகம் புதைத்தாள். கவின் வின் உணர்வு கூட்டில் சட்டென்று, அவள் செலுத்திய இன்ப தீ பற்றிக் கொண்டது.
“ஏ… செல்ல பொண்டாட்டி! காலைல இப்படி வந்து ரொமான்ஸ் பயர் மூட்டி விட்டா? வேலைக்கு போகாம லீவ் தான் போடணும். போட்டுடவா?” என்றவனை மேலும் இறுக்கிக் கொண்டவாறே சிணுங்கினாள் யுகா.
“போடேன்! இப்ப என்னவாம்? இத்தனை நாளா உன்ன விட்டுட்டு தனியா இருந்தேன் இல்ல. அதுக்கு எல்லாம் இன்ட்ரெஸ்ட், பெனாலிட்டி எல்லாம் யார் காம்பன்சேட் பண்ணுவா. எல்லாத்தையும் செட்டில் பண்ணாதான் உன்ன நான், உங்க சீப் க்கு ரிலீஸ் பண்ணுவேன். இங்க நான் தான் உன்னோட பாஸ்” என்றவள் குரலில் கலந்திருந்த கிறக்கத்தில், கவின் ஐஸ்கீரீமாக கரைந்துக் கொண்டிருந்தான்.
“இதுக்கு மேல வேலைக்கு போகணும்ன்னு எந்த அவசியமுமில்ல டார்லிங். நம்ம செல்ல குட்டி எழுந்து மம்மீன்னு… கூப்பிடறதுக்குள்ள ஒரு பெனால்டி ஷோ போட்டுடலாம் வா” என்றவாறே தன் முதுகுக்கு பின்னால் இருந்தவளை இழுத்து நெஞ்ச மேடுகளில் புதைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் இருந்த பலமும், அவன் உடலில் பரவியிருந்த உஷ்ணமும்! அவன் இளமையின் பசியை யுகாவுக்கு எளிதாகவே புரிய வைத்தது. அவளுக்கும் கவின் வின் பசியை போக்க தீராத வேட்கை உண்டாகி இருந்தது.
‘தேனும் தெவிட்டா பலாவும் கலந்த அவள் இதழில், அவன் முரட்டு உதடுகள் மெல்ல கவ்வி விளையாடி, பின் அழுந்த உறிஞ்சி ரசமெடுக்க தொடங்கவே, யுகாவின் கண்கள் அவளையும் அறியாமல் மேல் நோக்கி செருகி கொண்டதுடன், அவன் நெஞ்ச மேட்டில் நெருங்கி அணைத்து உரசி தழுவ முற்பட்டதன் விளைவாக, அவள் தன் கால் பெருவிரல்களில் பலம் கொடுத்து எக்கி நின்றாள். அவள் முதுகில் தன் இரும்பு கரங்கள் கொண்டு அணைத்திருந்த கவின் , கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி அவள் இடையோடு கரங்களை இழையவிட்டு இறுக்கிக் கொண்டான்’.
இருவரின் மூச்சுக் காற்றும் இணைதல் நிகழ்வுக்கு தூதுவிட்டு தீ மூட்டிக் கொண்டிருக்க… அறைக்குள் பரவியிருந்த குளிர் அவர்கள் இளமை வேட்கையை வெளியே இருந்து வேகமாக்கிக் கொண்டிருந்தது. சட்டென்று கவின் வின் இடுப்பில் தாவி ஏறி அவன் இடையை சுற்றி தொடைகளால் இறுக்கிப் பிடித்த யுகாவின் கை இப்போது ஓங்கி நின்றது. அவன் பிடரி மயிர்களை கொத்தாக பற்றியபடியே, முத்த யுத்தத்தில் அவனை மொத்தமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினாள் யுகா.
“ரொமான்டிக் பொண்டாட்டி! அடுத்தது பையன் தானே? இப்பவே கன்பார்ம் பண்ணிட்டேன்னா… அதுக்கு ஏத்த மாதிரியே நான் இன்புட் கொடுப்பேன்” என்று கூறிக் கொண்டு, அவளை பார்த்து கண்ணடித்தான் கவின் .
“சீ… பொறுக்கி! பொறுக்கி…. எல்லா டைமும் நீயே தான் எல்லாத்தையும் டிசைட் பண்ணுவியா? இந்த தடவை நான் தான் டிசைட் பண்ணுவேன். என்னோட கட்டளையே சாசனம்” என்றவாறே அவனை இன்னும் தீவிரமாக இளக வைக்கத் தொடங்கினாள் யுகா.
இன்ப தீண்டல்களும், இணைகளின் இணைப்பும் இங்கே தீரா தாகத்தில் தீவிரமாக அரங்கேறிக் கொண்டிருக்க… பல தம்பதிகளும் ஆன்மீக நம்பிக்கையில், குழந்தை வரம் வேண்டி கோவில்களில் அலை மோதிக் கொண்டிருந்தனர். மற்றொரு புறம் மருத்துவமனை காத்திருப்போர் அறைகள் அதிகாலையிலேயே நிறையவும் தொடங்கி இருந்தது. அதே நேரம் மலிவு விலையில் மலட்டு தன்மையை இன்னதென்றே தெரியாமல் பலரும் விரும்பி நுகர வரிசை கட்டி நின்றார்கள். பீட்சாவில் தொடங்கி பிங்கர் சிக்கன் வரை பிளேவர் வாரியாக விற்பனை சூடுபிடிக்க தொடங்கியிருந்தது.
‘இச்சு…தா… இச்சு….தா…. கன்னத்துல இச்சு….தா…’ என்ற பாடலுக்கு அச்சு பிசகாமல் ஆடிய ரூபா வை தன் ஆப்பிள் போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தான் மைத்ரேயன். அழகான குட்டி குட்டி எக்ஸ்பிரஷன் எல்லாம் கொடுத்து அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தாள் ரூபா .
“சூப்பர் ரூபா ! செமயா இருக்கு…. அப்படிதான்….. ம்ம்ம்ம் கிரேஸ் கூட்டு” என்று உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான் மைத்ரேயன். அங்கே நிகழும் ஆர்ப்பாட்டங்களை கேட்டபடியே, ரூபா வின் பெண் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்த அஸ்வினி அங்கே நிகழ்வதை பார்த்து ஒரு கணம் திடுக்கிட்டு நின்றாள்.
“அட பக்கிங்களா! என்ன பண்ணிட்டு இருக்கீங்க? கீழ தொட்டில குழந்தை அழுதுட்டு இருக்கா… நீங்க இங்க இச்சு குடுத்துட்டு இருக்கீங்க” என்று பொய் கோபம் காட்ட… அவசர அவசரமாக வீடியோவை ஆப் செய்துவிட்டு மொபைலை பின்னால் மறைத்துக் கொண்டு நின்றான் மைத்ரேயன். அசடு வழிந்தபடியே அஷ்வினியை நெருங்கி குழந்தையை வாங்கி கொண்டாள்.
“அது வந்து சித்தி… சும்மா ஒரு ஹாபிக்கு….. ரீல்ஸ் போடலாம்ன்னு” என்று திக்கி திக்கி சைலேஸ்வரி சொல்ல, அவள் காதை பிடித்து செல்லமாக திருகினாள் அஸ்வினி.
“ரீல் போடறது எல்லாம் இருக்கட்டும். அதை உங்க ஆபீஸ்ல வெச்சு செய்யுங்க. வீட்டுல நீங்க பண்ணற அலம்பலை பார்த்தா காயத்திரி அக்கா டென்சன் ஆகிடுவாங்க. புரிஞ்சுதா? மாப்பிளை மைதா அவர்களே! நீங்கள் கொஞ்சம் உங்கள் மனையாட்டிக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா?” என கேட்டு வைக்க, வினித் கொள்ளென்று சிரித்தான்.
“எங்க நீங்க எடுத்த வீடியோவை காட்டுங்க பாக்கலாம்” என்றபடியே வினித் அருகில் வந்த அஸ்வினிக்கு மைதா வீடியோவை காட்ட, அஸ்வினி முகத்தில் ஆச்சரியம்.
“ரூபா ! எஸ்சலன்ட்டா இருக்குடிமா…. ரொம்ப அழகா பெர்பார்ம் பண்ணி இருக்கியே! குட்… குட்” என்று உளமார வாழ்த்தினாள் அஸ்வினி. இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே மாடிக்கு ராகுலை அழைத்துக் கொண்டு வந்தாள் காயத்திரி. அத்தோடு அவர்கள் தங்கள் பேச்சை முடித்துக் கொண்டார்கள்.
“என்ன பண்ணறீங்க எல்லாரும் இங்க? ஏண்டி! இத்தனை வளர்ந்து நிக்கற…. கீழ உனக்கு எந்த வேலையுமே இல்லையா? வேலைகாரங்க இருக்காங்கன்னு சொன்னாலும் எல்லாம் சரியா நடக்குதான்னு கூடவா கவனிக்க மாட்ட. புள்ளைங்களையும் பெத்ததோட சரி… வளர்க்கறது எல்லாம் நாங்களும் மாப்பிள்ளையும் தான். பொறுப்பே இல்லாம இருக்கியே ரூபா ! இதெல்லாம் நல்லதுக்கே இல்ல” கடுமை மாறாமல் சிடுசிடுத்தாள் காயத்திரி.
மாமியார் மெச்சியதால் வினித் முகத்தில் புன்னகை பரவியதை கண்ட ரூபா , மெல்ல அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில்….
“மவனே! மாமியார் பெருமையா பேசிட்டதும் ரொம்ப சந்தோஷ படாத! நைட்டுக்கு என் மடில தான் வந்து பேபி-ன்னு படுக்கணும். அப்ப காட்டுறேன் நான் யாருன்னு?” என்று செல்ல மிரட்டல் விடவே… வினித் சராலென்று அப்ரூவர் ஆனான்.
“விடுங்க அத்தை! பசங்களை தான கவனிச்சுக்கணும் நான் பார்த்துக்கறேன். வேலைகாரங்க என்ன செய்யறாங்கன்னு தானே பார்க்கணும்… செஞ்சுட்டா போச்சு! இதுக்கு எல்லாமா கோவிச்சுக்கறது? பாவம்! அவளுக்கு இன்னைக்கு ஆபீஸ்ல நெறய வேலை. அவள நான் தான் ரெஸ்ட் எடுக்க சொன்னேன்” என்றவாறே மகளை வாங்கி இடுப்பில் வைத்துக் கொண்டே ராகுல் கையை பிடித்துக் கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தான்.
அவனது திடீர் மாற்றம் கண்டு, அஸ்வினியும் காயத்திரியும் வியப்பின் உச்சம் தொட்டார்கள்.
“இதென்னடி கொடுமையா இருக்கு! இவருக்கு நாம சேர்த்து பேசுனா, மனுஷன் நம்மளையே வாரி விட்டுட்டு போறாரு” என குழப்பம் மேலிட கூறினாள் காயத்திரி. அஸ்வினி ரூபா வை பார்க்க…. அவள் எதுவுமே நடக்காதது போல கழுத்தில் கையை வைத்து தேய்த்துக் கொண்டே வானத்தை ஏறிட்டு பார்ப்பது போல நடித்தாள். அப்படியே அவள் மெல்ல அவர்களை கடந்து வேகமாக மாடிப்படிகளில் இறங்கவும் தொடங்கினாள்.
அதே நேரம் டெல்லியின் புறநகர் பகுதியில், வேறு காட்சிக்கான ஒத்திகை தொடங்கியிருந்தது. பழைய மெக்கானிக் ஷெட் ஒன்றின் பின்னால் இருந்த அறையில் நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் கவினின் பிளைட்டில் பயணம் செய்த இளைஞனும் இருந்தான்.
“கைஸ்! ரோஹித் மரணம் வெறும் அலர்ட் இல்ல. அபாயத்துக்கான ஆரம்ப புள்ளி. ரோஹித் விஷயத்துல இந்த சி.பி,ஐ ஆபீசர் தான் மெயின் ரோல் பிளே பண்ணி இருக்கான். இவனை நாம குளோசா மானிட்டர் பண்ணனும். அதே நேரம்…. ரோஹித் பார்த்துட்டு இருந்த வேலையை இனி சல்மான் பாக்க போறதா நேத்து எனக்கு தகவல் வந்து இருக்கு. சல்மான்தான் நம்ம எல்லாரையும் இனி லீட் பண்ண போறான்” கூறிவிட்டு அமைதியானான் மெக்கானிக் வேடத்தில் இருந்தவன்.
“யார் அண்ணா சல்மான்? நம்ம ரோஹித் ப்ரோ-வை விட பெரிய ஆளா?” என்று கேட்டான் அந்த இளைஞன். மெக்கானிக் திடுக்கிட்டுவிட்டு அவனை அதட்டினான்.
“டேய்…. டேய்…. இப்படி எல்லாம் பேசி வைக்காதே! ரோஹித் சிங்கம் தான். அதுல மாத்தமே இல்ல. ஆனா சல்மான் சிங்கமும் யானையும் சேர்ந்த யாளி. சிம்ம யாளி! போகப் போக உனக்கேத் தெரியும். அவசியம் இல்லாம வாயை விட்டு வைக்காதே! சல்மானுக்கு ஊரெல்லாம் காது இருக்கு! புரிஞ்சுதா?” மெக்கானிக் குரலில் கடுமையும், அக்கறையும் அதே நேரம் சல்மான் மீது அளவற்ற பயமும் இருந்தது.
இளைஞன் வாயை மூடிக் கொண்டான். ஆனாலும் அவனுக்கு சல்மான் பற்றி தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் இருந்தது என்பதை அவன் கண்களில் இருந்த பரபரப்பு வெளிப்படுத்தியது. இவர்கள் சம்பாஷணை இங்கே போய்க்கொண்டிருந்த நேரத்தில் சல்மான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும், ரூபாலி வர்மா முன்னால் கையில் சர்ஜரி நைப்-புடன் நின்று கொண்டிருந்தான்.
“ரூபாலி! நீங்க இப்படி பண்ணி இருக்க கூடாது. நான் அனுப்பி வெச்ச பசங்களை நீங்க ட்ரீட் பண்ண விதமும், அவனுங்களை எங்க சிண்டிகேட்டுக்கு எதிரா திருப்புன முறையும் கொஞ்சம் கூட நல்லா இல்ல. இதுக்கு மேல நீங்க இந்த உலகத்துல இருந்தா…. மேற்கொண்டு பேசுனா எங்களுக்கு ரொம்ப ஆபத்து! அதனால! சத்தமில்லாம சீக்கிரமா கிளம்பிடுங்க. நீங்களா ஆப்பரேட் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும். நானா பண்ணா….. ஹாஹாஹாஆ…. அனுபவம் இல்ல பாருங்க… ஏடா கூடமா வெட்டி வெச்சுடுவேன். ரொம்ப கஷ்டமா ஆகிடும். உங்க வசதி எப்படி?” சொல்லிவிட்டு அமைதியாக ரூபாலியை ஏறிட்டு பார்த்தான் சல்மான்.
‘இனி வாழ வழியே இல்லை! மரணம் உண்மைகளை மறைக்க போவதை தடுக்க முடியாது’ என்பதை நன்றாக புரிந்து கொண்டிருந்த மருத்துவர் ரூபாலி, சல்மான் கைகளில் இருந்து நடுங்கிக் கொண்டே சர்ஜிக்கல் நைப்-பை வாங்கினாள். அவளது கைகள் தீர்க்கமான முடிவை எதிர்கொள்ள தயாராகி வலது கழுத்து நரம்பை நோக்கி நகரத் தொடங்கியிருந்தது….
சின்ன ஸ்டென்லெஸ் ஸ்டீல் பொருள் டைல்ஸ் தரையில் துள்ளி விழும் கிளிங் சத்தம் மட்டும் இப்போது அந்த அறையில் ஒலித்தது. சல்மான் கண்களில் குரூரம் தெரிக்க, அந்த அறையில் இருந்து வெளியேற தொடங்கியிருந்தான்.
.
தொடரும்………
இந்த தொடர் பிடிச்சு இருந்தா எங்களை பாலோ பண்ணுங்க… உங்க நண்பர்களுக்கு பகிருங்க… மறக்காம கீழ இந்த அத்தியாயம் பத்தி கமெண்ட் பண்ணுங்க. எங்களோட புது கதைகள் கட்டுரைகளை கீழ இருக்கற லிங்க்-கை கிளிக் பண்ணி இப்பவே வாசியுங்க….
https://www.vithaigalpathipagam.com/2026/02/blog-post_19.html.
https://www.vithaigalpathipagam.com/2026/02/2_51.html
https://www.vithaigalpathipagam.com/2026/02/2_14.html


Comments