யுத்த களமும் இரத்த ஆறும் - (Historical Non Fiction Series) அத்தியாயம் 1

📌 Topic Summary:

மத்திய கிழக்கு அரசியலை மாற்றும் இஸ்ரேல்–பாலஸ்தீன் மோதல் வரலாறு!

உலகப்போர் அபாயத்தை உருவாக்கும் வளைகுடா பதற்றம் என்ன?

சியோனிசம் எப்படி மத்திய கிழக்கு அரசியலை பாதித்தது?

மேற்குக் கரை நிலத் தகராறின் உண்மை பின்னணி!

புவிசார் அரசியல் உலக அமைதிக்கு அச்சமா?

இஸ்ரேல் உருவாக்கம் உலக அரசியலை மாற்றியதா?அரபு நாடுகள் எதிர்ப்பின் உண்மை காரணம் என்ன?


சர்வதேச உ றவியல் முறியும் தருணமா இது? இஸ்ரேல்–ஈரான் பதற்றத்தின் வரலாறு!


வளைகுடா பிராந்தியம் உலகப்போரின் மையமா? இனஅரசியல் மோதல்கள் எங்கு கொண்டு செல்கின்றன?


மத்திய கிழக்கு அரசியல் சமநிலை குலைந்ததா? உலக அரசியல் வரலாற்றின் புதிய திருப்பம்!


மூன்றாம் உலகப்போரின் முன்னோட்டமா? உலக பாதுகாப்புக்கு உருவாகும் புதிய அச்சுறுத்தல்!






யுத்த களமும் இரத்த ஆறும் - 

(Historical Non Fiction Series) 

PART-1


புவிசார் அரசியல் அல்லது ஜியோ பாலிடிக்ஸ் ஏற்படுத்தும் தாக்கம் தான் பல சச்சரவுகளுக்கும்  வழிவகை செய்கிறது. நவீன உலகில் தங்கள் இருப்பை, ஆதிக்கத்தை, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள அல்லது பிறருக்கு உணர்த்த, ஒவ்வொரு நாடும் ஆசைப்படுகிறது.  அதற்காக பிற நாடுகள் மீது தங்கள் பலத்தை காட்ட அவை தயங்குவதில்லை. இந்த  காட்டுமிராண்டித்தனம் கடந்த பத்து ஆண்டுகளில் உலக வரைபடத்தில் பல இடங்களில் நிகழ்ந்துள்ளது என்பதே கசப்பான உண்மை. 


மத்திய தரைக்கடல் பகுதிதான் அறிவிக்கப்படாத உலகப்போருக்கு அடித்தளமாக மாறப்போகிறது. அதற்காக நடவடிக்கைகள் பத்தாண்டுகளுக்கு முன்னரே சத்தமின்றி தொடங்கி விட்டது என்பதே ஆய்வாளர்களின் கருத்து. மத்திய தரைக்கடலில் ஆரம்பித்திருக்கும் இந்த இரத்த வெறி மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவி வருகிறது. உக்ரைன்-ரஷ்யா போர் இன்னமும் ஓய்ந்த பாடு இல்லை. தென்கொரியா- வடகொரியா இடையே இன்னும் அனல் வீசுகிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயும், சீனாவுக்கும் தைவானுக்கும் இடையேயும் இன்னமும் அனல் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே இந்த பதட்டம் இன்னமும் அதிகமாக இருக்கிறது. வெகு சமீபத்தில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே போர் தொங்கியிருக்கிறது. 


வெனிசுலாவில் நிகழ்ந்த தாக்குதலும் அந்த நாட்டை கைப்பற்றிய அவலமும் முடிவதற்கு முன்பாகவே, கிரீன்லாந்து மீது ஆக்கிரமிப்பை நிகழ்த்த அமெரிக்கா முயற்சித்துக் கொண்டிருக்கிறது. உலகத்துக்கே தன்னை பெரியண்ணனாக சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவுக்கும் சரி, மறுபுறம் தன் பலத்தை உலகிற்கு உணர்த்த, உக்ரைன் மீது தாக்குதல் நடத்திக் கொண்டே, பிற நாடுகளில் நிகழும் சச்சரவுகளுக்கு நடுநிலை கருத்துக் கூறும் காரியம் செய்யும் ரஷ்யாவும் சரி போரை தவிர்க்க கூறும் அறிவுரைகள் எல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டுமே. சீனாவோ சில்லறை வர்த்தகம் தொடங்கி சில்க் ரோடு வரை, பல்வேறு விதமான செயல்களை ஓசையே இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில்… அதன் போக்கிற்கு புவிசார் அரசியலில் சுயாதிகாரம் செய்து வருகிறது. வளைகுடாவில் உருவாகும் மற்றொரு அதிகார மையம், இவையனைத்துக்கும் சவால் என்ற ரீதியில் மற்றொரு வகை யுக்தியுடன் செயலாற்றி வருகிறது. 


அவரவர் பார்வையில் சரியாக படும் அத்தனையும், சாமானியரின் பார்வையில் எப்படி இருக்கிறது என்பதை அலசும் இந்த கட்டுரையை விரிவாக வாசிக்கலாம்…. நிகழும் சம்பவங்களின் உண்மைத்தன்மையை ஆதாரங்களுடன் தெரிந்து கொள்ளலாம். முழுக் கட்டுரையையும் வாசிக்கும் போது உங்களுக்கு நிகழும் சம்பவங்களின் பின்னணி புரியும். உலகப்போருக்கு விதைத்த விதை…. முளைத்து செடியாக மாறியிருக்கும் உண்மை விளங்கும். 


1.இஸ்ரேல் பாலத்தீன மோதல் வரலாறும் மத்திய கிழக்கு அரசியலும்: 


உலக வரைபடத்தில் ஏர் கலப்பை போன்ற வடிவத்தில் இருக்கும் குட்டியூண்டு நாடு இஸ்ரேல். இஸ்ரேலில் வரலாற்றை தப்பாக புரிந்து கொண்டு, இப்போது நிகழும் சம்பவங்களுடன் தப்பிதமாக ஒப்பிடுவதை பலர் இன்று அதிகமாக செய்து வருகிறார்கள். உண்மை என்ன? 


இஸ்ரேல் என்பது பன்னிரெண்டு வாரிசுகள் அல்லது குலங்களை உள்ளடக்கிய குடும்பம். பின்னாளில் இந்த குலங்கள் ஒன்றுக்கொன்று பிரிந்து சண்டையிட்டுக் கொண்டன. பின்னர் இரு அதிகார மையங்களாக மாறின. யூதா என்றும் இஸ்ரேல் என்றும் பிரிந்த இந்த மையங்களை பல கட்டங்களில் பல அரசுகள் துவம்சம் செய்தன. அங்கே வாழ்ந்த மக்களை நாடுகடத்தி வெற்றி பெற்ற நாடுகள் தங்கள் இருப்பை உறுதி செய்தும் கொண்டன. இஸ்ரேல் இனத்துக்கு பங்காளி இனமாக உருவான மற்றொரு இனம், பின்னாளில் யூதா மற்றும் இஸ்ரவேல் என்ற நிலப்பரப்புகளை கைப்பற்றி ரோமர்கள் தலையெடுக்கும் வரை வைத்திருந்தது. அந்நாட்களில் அவர்கள் ஏற்கனவே இஸ்ரவேல் தேசத்தின் உள்ளே சிறுபான்மை இனமாக சுருங்கி வாழ்ந்தவர்களை யூதா மற்றும் இஸ்ரவேல் மக்கள் வாழ்ந்த பகுதியில் குடியேற்றம் செய்து வைத்து, அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது. 


இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், நாடுகடத்தப்பட்ட இஸ்ரவேல் இனத்தை ஒருங்கிணைக்க உருவான சியோனிஸம் என்ற அமைப்பு, வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களை மீண்டும் தாயகம் திரும்ப அறைகூவல் விடுத்தது. இங்குதான் பண்டைய இஸ்ரவேல் இனத்துக்கும், தற்போதைய இஸ்ரேல் அரச அமைப்புக்கும் இடையே வித்தியாசம் உருவாகிறது. 


சியோனிஸ்டுகள் தீவிர பழமைத்துவதை புனரமைக்கும் விதமாக நாடு திரும்பிய மக்களுக்கு கடுமையான மத கட்டுப்பாடுகளையும், விதிகளையும் உருவாக்கிக் கொடுத்தது. நான் முன்னமே கூறியது போல, இஸ்ரவேல், யூதா இனத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் யாரும் நாடு திரும்பிய நேரத்தில், அதே இனமாக இருந்திருக்கவில்லை. பல்வேறு இன கலப்புகள் இங்கே இயற்கையாகவே நிகழ்ந்திருந்தது. சியோனிஸ்டுகள் வேறு, யூதர்கள் வேறு. 


ஹிட்லர் யூதர்களை கொன்றான் என்று வரலாற்றில் படித்து இருப்போம். ஹிட்லருக்கு உருவான அதே தவறான புரிதல்தான் இப்போதும் பலருக்கும் இருக்கிறது. யூதர்கள் யூதர்களாகவே இல்லாத பட்சத்தில் அவர்கள் இஸ்ரேல் இனத்தவர்கள் என்று உறுதியாக சொல்லவே முடியாது. அதே நேரத்தில் இஸ்ரேலிய இனம் அதாவது யூத, பெஞ்சமின், குலத்தில் பிறந்து அவர்களுக்குளாகவே பெண் கொடுத்து பெண் எடுத்த பழமை மாறாத இனம் இல்லாமலும் இல்லை. 


அவர்கள் தான் சியோனிஸ்ட் அமைப்பை உருவாக்கினார்களா? என்றால் அதுவும் இல்லை. சியோனிஸ்டுகள் பழமைவாதத்தின் மூலம் “சென்டர் ஆப் பவர்” என்று சொல்வார்களே அதை செய்யும் குறிப்பிட்ட மதவாதிகள் என்பதே சரி. அவர்கள் மதத்தின் பெயரால் மட்டுமே மக்களை ஒருங்கிணைத்திட முடியும் என்ற கோட்பாட்டை பின்பற்றுபவர்கள். சரி விஷயத்துக்கு வருவோம்….


சியோனிஸ்டுகள் உருவாக்கிய இந்த ஒருங்கிணைத்தல் புதிய எழுச்சியை உருவாக்கிட, நாடு திரும்பியவர்களை கொண்டு அவர்கள் சிதைந்து கிடந்த பூமியை புனரமைத்தார்கள். அவர்களுக்கென்று ஒரு அரசையும் உருவாக்கினார்கள். அதுவே இன்றைய இஸ்ரேல் அரசு. 


இதற்கும் யூத, பெஞ்சமின், இஸ்ரவேல் பிரிவுக்கும் நேரடி ஒற்றுமை எதுவுமே இல்லை. அதே போல இஸ்ரேலில் வாழ்பவர்களுக்கும், உலகில் பல நாடுகளிலும் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்ரேலியர்களும் பாலத்தீனியர்களும் எப்படி வெவ்வேறு இனமோ! அப்படியே இஸ்ரேலியர்களும் கிறிஸ்தவர்களும் ஒரே மத, இனத்தவர்கள் இல்லை. இதை முதலில் தெளிவாக புரிந்து கொள்வோம். 


இஸ்ரேல் நாடு உருவானது முதல், மோதல் உருவாகத் தொடங்கியது. அது இஸ்ரேல் நாட்டில் இஸ்ரேலியர்கள் மட்டுமே வாழ முடியும் என்ற துர்போதனையை விதைக்கவே, அவர்களின் பங்காளி இனமான அராபியர்களால் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட கானானிய மக்கள் நேரடியாக பாதிப்புகளை சந்திக்கத் தொடங்கினார்கள். மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அரசியல் மாற்றங்களை உருவாக்கத் தொடங்கியது. 


பெலிஸ்திய, கானானிய இனத்தை சேர்ந்த மக்கள் மீது, அராஜகத்தை சியோனிஸ்டுகள் அரங்கேற்றம் செய்யத் தொடங்க… அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வலிமையான அண்டை நாடுகள் ஒன்றாக அணிவகுத்தன. எகிப்து தொடங்கி ஈராக் வரை இஸ்ரேலை சுற்றி இருந்த நாடுகள் சியோனிஸ்ட் அரசை எதிர்த்து போர் செய்யத் தொடங்கின. 


அதன் பின்னர் பல போர்கள், பல இடர்பாடுகள்…. இரத்த சேற்றில் நிலங்கள் புரண்டும் அடங்காத வெறி இருபக்கமும் பெருகிக் கொண்டே சென்றது. எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான், ஈரான், ஈராக்  என்று நீண்ட எதிரிகளை இஸ்ரேல் சம்பாதித்துக் கொண்டது வரலாறு. அதே நேரத்தில் பாலஸ்தீனிய மக்களையும் அவர்கள் வாழ்விடங்களையும் சுருக்கி மேற்குக் கரை என்ற பகுதிக்குள் பிரம்மாண்ட சுவர்களுக்கு பின்னால் அடக்கி நிறுத்தியது இஸ்ரேல். 


பாலத்தீனியர்களுக்கு உரிமையானதை மீட்டெடுக்க உருவான புரட்சிப் படைகளுக்கு, பயிற்சி கொடுத்து பணமும் கொடுத்து, கொம்பு சீவிவிடும் வேலையை அரபு நாடுகள் தொடர்ச்சியாக செய்யத் தொடங்கின. அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. சுற்றிலும் இருக்கும் அத்தனை இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே, ஒரு சியோனிஸ்ட் நாடு இருப்பதை அவர்கள் விரும்பவில்லை என்ற சப்பைக்கட்டும் பரப்பப்பட்டது. 


உண்மை என்ன தெரியுமா? அரபு நாடுகள் சியோனிஸ்ட் அரசை எதிர்க்க ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது. அது சியோனிஸ்ட் அரசு பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக செய்த இனப்படுகொலைகள், அராஜகங்கள், அடக்குமுறைகள் மற்றும் உரிமைகளை மறுக்கும் போக்கால் விளைந்த கோபமே தவிர வேறொன்றும் இல்லை. மேற்கத்திய லாபி மூலமாக இஸ்ரேல் மத்தியதரைக்கடல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் தன்னை பலமான அரசாங்கமாக மாற்றிக் கொள்ள துடித்தது. அதை அரபு நாடுகள் துளியும் ரசிக்கவில்லை.



இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டுகளில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலை அங்கீகரித்த பிறகு, நிலைமை மோசமாகத் தொடங்கியது. வளைகுடாவில் ஏற்கனவே ஈராக், சிரியா, லெபனான் என்று பல நாடுகளின் இஸ்ரேல் எதிர்ப்பு தலைவர்களை குறிவைத்து அமெரிக்க நடத்திய நாடகத்தில் பலரும் இறந்து போயிருந்தார்கள். இதனால் இஸ்ரேல் எதிர்ப்பு குறையத் தொடங்கிய நேரத்தில், ஈரான் இஸ்ரேல் எதிர்ப்பில் தீவிரம் காட்டத் தொடங்கியது. 


இரான் இஸ்ரேல் இடையே மோதல் உருவாக யார் காரணம்? வரலாறு இஸ்ரேல் ஈரான் இடையே ஆழமான நட்பு இருந்ததாக சொல்கிறதே? திடீரென்று இஸ்ரேல் ஈரான் இடையே பகை வர என்ன காரணம் இருக்க முடியும்? எங்கிருந்து கிளம்பியது பூதம்? அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கிறேன். 


இந்தக் கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே கமெண்டில் வந்து சொல்லுங்கள். இந்த கட்டுரை பிடித்து இருந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள். இது போன்ற வரலாற்று தகவல்களை விளக்கமாக தெரிந்து கொள்ள எங்கள் பதிப்பக இணையதளத்தை இப்போதே பாலோ செய்யுங்கள்.  


எங்கள் புதிய கட்டுரைகள், கதைகளை படிக்க கீழே இருக்கும் லிங்க்கை கிளிக் செய்யுங்கள். 


Comments

Popular posts from this blog

காதலர் தின சிறப்புக் கட்டுரை